search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூந்தமல்லி நகராட்சி"

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

    பூந்தமல்லி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 1300 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி திடீரென பூந்தமல்லி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்ய வந்தார். அவர் பஸ் நிலையம், குடிநீர் வழங்கும் தொட்டிகளை பார்வையிட்டார்.

    பின்னர் சந்தியாநகர் பகுதிக்கு சென்ற கலெக்டர் வீடு, வீடாக சென்று சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வீட்டு முன்பு குப்பைகள் தேங்கக்கூடாது. சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

    மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை பரிசோதித்தார். சுகாதார பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கண்டிப்பாக கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இந்த ஆய்வு பணி 8 மணி வரை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

    அப்போது, துணை இயக்குனர்கள் கிருஷ்ண ராஜ், பிரபாகர், நகராட்சி கமி‌ஷனர் டிட்டோ, தாசில்தார் புனிதவதி, நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டைபோல் தேங்கி உள்ளதால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12-வது வார்டுக்குட்பட்ட பாப்பாடி தர்கா, கோரிமேடு 6-வது தெரு, 7-வது தெரு பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்து நகராட்சி கமி‌ஷனரிடம் மனு அளித்தனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

    ×